ஐ.பி.எல் தொடக்க விழா மும்பையில் கோலாகலமாக இடம்பெற்றது (PHOTOS)

ஐ.பி.எல் தொடக்க விழா மும்பையில் கோலாகலமாக இடம்பெற்றது (PHOTOS)


மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
னெ்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதை முன்னிட்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை மும்பையில் கோலாகலமாக நடந்தது. மும்பை வொர்லியில் உள்ள நெஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நடைபெற்றது.
இதேபோல, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடப் போகும் பிராவோ, சாம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தினார். அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு இசைக்குழுவான மேஜர் லேசர் குழுவின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இதுதவிர இங்கிலாந்தை சேர்ந்த பாப் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த குழுவின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அரங்கை ஒளிர வைக்கும் நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Thank you for visiting my website.