நிகழ்ச்சி செய்த பெண்ணை ராஜநாயகம் கடித்ததில் மேடையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பாம்புகளுடன் பாட்டுப் பாடி ஆடியபடி நிகழ்ச்சி செய்த பெண்ணை ராஜநாயகம் கடித்ததில் மேடையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசியாவிலுள்ள கரவாங் என்ற நகரில் இர்மா புலே என்ற பிரபல பொப்பிசைப் பாடகி சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
அவர் மேடை நிகழ்ச்சிகளின் போது சிறிய பாம்புகள் முதல் மலைப்பாம்புகள் வரை தனது உடலில் சுற்றிக்கொண்டு நடனமாடிப் பாடல்களைப் பாடுவது வழக்கம்.
இந்நிலையில், மலைப்பாம்பிற்குப் பதிலாக ராஜநாகத்தைப் பயன்படுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட ராஜநாகத்திற்கு பல் நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜநாகத்துடன் மேடையில் பாடிய அவர், கவனக்குறைவால் பாம்பின் வாலை மிதித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த ராஜநாகம் அவரின் தொடையில் கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் மேடையிலேயே மயங்கி வீழ்ந்துள்ளார். அதிர்ச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
Thank you for visiting my website.