'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது

சென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கப்பட்டு இருக்கிறது.
'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார் பரதன், இயக்குநர் பரதன் ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கி இருக்கிறார்.
விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் வில்லன்களாக
ஜெகபதி பாபு மற்றும் டேனியல் பாலாஜி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 'தெறி' வெளியீட்டிற்கு பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரியில் பெரும்பகுதிகள் படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

Thank you for visiting my website.