முன்னுக்கும்!பின்னுக்கும் முடிவில்லா முரண்பாடு..!

முன்னுக்கும்!பின்னுக்கும்
முடிவில்லா முரண்பாடு..!
************************************
காதலில் நனைதல்
பிடிக்கும்
கூதலில் ஊடல்
பிடிக்கும்
கைகோர்த்து நடக்க
பிடிக்கும்.
ஒற்றைக் குடை
பிடிக்கும்.
இடைவெளி இன்றி
நடக்கப் பிடிக்கும்.
இனித்து இளித்து
பேசப் பிடிக்கும்.
காதோரம் கதை
சொல்லப் பிடிக்கும்.
கவிதை எழுதப்
பிடிக்கும்.
கதை சொல்லப்
பிடிக்கும்.
செல்லக் கோபம்
பிடிக்கும்
சினுங்கல் தனகல்
பிடிக்கும்..!
எல்லாம் என்றும்
பிடிக்கும் எனச்
சொல்லப் பிடிக்கும்.!
கலியாணத்தின் பின்
எல்லாமே எதிர்மறை.
தள்ளிப்போகப் பிடிக்கும்
தனிமை பிடிக்கும்
மௌனம் பிடிக்கும்
மோதல் தவிர்க்கப்
பிடிக்கும்.
தூக்கம் பிடிக்கும்
தூங்குவது போல்
நடிக்கப் பிடிக்கும்.
தூரப் பயணம்
தனித்துப் போகப்
பிடிக்கும்.
ஒப்பீடு பிடிக்கும்
மொத்தத்தில் அவள்
கழுத்தில் தாலி
தொங்கும். !இவன்
கழுத்தில் மூஞ்சை
தொங்கும்.
இதுக்குப் பெயர்
தான் இல்லற
வாழ்க்கையாம்..
                                                                                                     5.10.2015
                                                                                              thayanithy.thambiah
Thank you for visiting my website.