பாரபட்சம்..!

பாரபட்சம்..!
*****************
உலக நீதி
சமநீதி என
பேச்சளவில்
ஏராளம் நீதிகள்.
ஆனாலும்
தாராளம்
இல்லாத உலக
போக்கில்
மாற்றம் ஏதும் இல்லை..!
நீதித் தராசில்
நிறுக்கப் படாமலே
நீத்துப்போகும்
நிலை பெருகி
நிலைகுலையும்
நாங்கள் நாதி
அற்றவரானோம்.
மாற்றம் ஏதும் இல்லை. !
அசிற்திராவகத்துக்கும்
பாலியல் கொடுமைகளும்
காஸ் அடுப்பு வெடிப்புக்களும்
அடையாளம் இல்லாத
அவலங்களும்
கூட்டான குதர்க்கமும்
சட்டத்தின் துவாரங்களால்
தப்பி ஓடுவதால்
மாற்றம் ஏதும் இல்லை...!
திணிப்பு திருமணமும்
கட்டாயக் காதலும்
பிடிப்பிழகிட வேண்டாத
பொம்மைகளாய்
விஷேட பெயர்
சூட்டலும்! சுமத்தும்
பழிகளும் சாதக
பாதங்களும் நீதிக்கு
முன் தூக்கு கயிற்றில்
தொங்கும் நிலையில்
மாற்றம் ஏதும் இல்லை.!
மரணம் ஒன்றுதான்
சரணம் சொல்லி
சகபாடியாகுது
சங்கடம் தீர்க்கும்
தர்ம சங்கடங்கள்
என்று தான் தீருமோ!
மாற்றம் ஒன்று நிகழாதோ..!
                                                                                                            14.10.2015
                                                                                                    thayanithy.thambiah
Thank you for visiting my website. எமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.