இனிமை தரும் காத்திருப்பு..!
******************************************
அதிகாலை
அன்பானவனை
பணிக்கு அனுப்பி
விட்டு
எது பிடிக்கும்
எது பிடிக்காது
என பார்த்து பார்த்து
ஓடி ஓடி சுவை
பார்த்து சமைத்து
அடிக்கடி ஜன்னலோரம்
ஓடிச் சென்று
ஏக்கம் நிறைந்த
விழிகளோடு
மணாளனை
எதிர்பார்த்து
ஏமாற்றங்களுடன்
திரும்புவதும்
விரும்புவதுமான
அன்றைய
காலங்கள்.....!
******************************************
அதிகாலை
அன்பானவனை
பணிக்கு அனுப்பி
விட்டு
எது பிடிக்கும்
எது பிடிக்காது
என பார்த்து பார்த்து
ஓடி ஓடி சுவை
பார்த்து சமைத்து
அடிக்கடி ஜன்னலோரம்
ஓடிச் சென்று
ஏக்கம் நிறைந்த
விழிகளோடு
மணாளனை
எதிர்பார்த்து
ஏமாற்றங்களுடன்
திரும்புவதும்
விரும்புவதுமான
அன்றைய
காலங்கள்.....!
இன்றைய
நவீன உலகில்
கலைக்கப் பட்டு
உலைக்கப் பட்டு
நிலைகுலை பட்டு
எல்லாமே பட்டுப்
போன வாழ்வில்
பிடிப்பின்றி
சீரழிவோர்
பலராகிப்
பந்தங்கள் பாசங்கள்
பண்பு பரிவு என
எல்லாம் தொலைந்து
முகங்களின் தரிசனம்
அற்று. அமைதியிழந்து
முகநூலுக்குள் முடங்கி
நேரங்கள் தொலைத்து
வீண் சிக்கல்கள்
சீரழிவுகள் என
புலம்பெயர் வாழ்வில்
புதுவித அத்தியாயம்
எழுதும் நிலையில்
நம்மவர்
அலைகின்றனர்..!
6.10.2015
நவீன உலகில்
கலைக்கப் பட்டு
உலைக்கப் பட்டு
நிலைகுலை பட்டு
எல்லாமே பட்டுப்
போன வாழ்வில்
பிடிப்பின்றி
சீரழிவோர்
பலராகிப்
பந்தங்கள் பாசங்கள்
பண்பு பரிவு என
எல்லாம் தொலைந்து
முகங்களின் தரிசனம்
அற்று. அமைதியிழந்து
முகநூலுக்குள் முடங்கி
நேரங்கள் தொலைத்து
வீண் சிக்கல்கள்
சீரழிவுகள் என
புலம்பெயர் வாழ்வில்
புதுவித அத்தியாயம்
எழுதும் நிலையில்
நம்மவர்
அலைகின்றனர்..!
6.10.2015
thayanithy.thambiah