கலங்கரை விளக்கு..!
****************
அம்மா பூமியெனில்
அப்பா வானமாவார்.
ஆகாயக் குடை!
நடை தளர்வதில்லை.
படை கண்டும்
நடுங்கவில்லை.
****************
அம்மா பூமியெனில்
அப்பா வானமாவார்.
ஆகாயக் குடை!
நடை தளர்வதில்லை.
படை கண்டும்
நடுங்கவில்லை.
இவரடியில்
அடைக்கலமானோர்
ஆயிரமாயிரம்.
ஊருக்குள் இவரும்
அழகான ஆலமரம்..!
அடைக்கலமானோர்
ஆயிரமாயிரம்.
ஊருக்குள் இவரும்
அழகான ஆலமரம்..!
சாய்மனக் கதிரை
கண்ணாடி
தோல் செருப்பும்
கோடாப் போட்ட
சுருட்டும்
தீப்பெட்டியும்
எஞ்யிருக்கும்
உடமைகள்...!
கண்ணாடி
தோல் செருப்பும்
கோடாப் போட்ட
சுருட்டும்
தீப்பெட்டியும்
எஞ்யிருக்கும்
உடமைகள்...!
ஊருக்குள்
பேர் சொல்லும்
பெருமனிதர்.
யாருக்கும்
தீங்கிழைக்காத
அரும் மனிதர்.!
பேர் சொல்லும்
பெருமனிதர்.
யாருக்கும்
தீங்கிழைக்காத
அரும் மனிதர்.!
ஊர் வளமும்
ஊர்ப் பிள்ளைகளும்
இவரை உறுத்தும்
கவலைகள்.! போரின்
நியாயம் உணர்ந்து
உருப்படிகள் இரண்டினை
இழந்த மாமனிதர்.!
ஊர்ப் பிள்ளைகளும்
இவரை உறுத்தும்
கவலைகள்.! போரின்
நியாயம் உணர்ந்து
உருப்படிகள் இரண்டினை
இழந்த மாமனிதர்.!
வருவினம்
பிள்ளைகள் இது
இவரது தின சரி
உச்சரிப்பு.!
நம்பிக்கை..
தளராத வைரமிவர்..
உறுதியானவர்
வாழும் காலத்திலேயே
விடியல் வந்திட
வேண்டுமெனும்
பற்றாளன்...!
பிள்ளைகள் இது
இவரது தின சரி
உச்சரிப்பு.!
நம்பிக்கை..
தளராத வைரமிவர்..
உறுதியானவர்
வாழும் காலத்திலேயே
விடியல் வந்திட
வேண்டுமெனும்
பற்றாளன்...!
இழுத்து வெளி
விடும் ஒவ்வொரு
புகை வட்டமும்
எதிர் காலத்
திட்டங்கள் தான்
தனித்து விட்ட
போதும் கலங்காத
கலங்கரை விளக்கு..!
இவரைப் போல்
ஆங்காங்கே
ஆயிரம் அப்பாக்கள்.
இல்லாமல் இல்லை..!
விடும் ஒவ்வொரு
புகை வட்டமும்
எதிர் காலத்
திட்டங்கள் தான்
தனித்து விட்ட
போதும் கலங்காத
கலங்கரை விளக்கு..!
இவரைப் போல்
ஆங்காங்கே
ஆயிரம் அப்பாக்கள்.
இல்லாமல் இல்லை..!
16.10.2015
thayanithy.thambiah
Thank you for visiting my website. எமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.