அழையா விருந்தாளிகள்..!

அழையா விருந்தாளிகள்..!

 
 
 
 
 
எங்கள் கைகள் ஓங்கிய பொழுது

உங்கள் குரலும் ஓங்கியே இருந்தன

எங்களைப் பாடாத வாயும் இல்லை

போற்றாத குரலும் இல்லை....

நாங்கள் ,


உங்கள் வாழ்வை

புதுப்பிக்க வந்த நவீன

நாயகர்கள் என

பொங்கியே பூரித்தீர்கள் !!


உங்கள் குரலால் நாங்களும்

செருக்குடனே

செருக்களம் ஆடினோம்...


நாளொரு வண்ணம்

பொழுதொரு வண்ணம்

புதுப் புதுப் படமாய்

வெளியே விட்டோம்...


என்னதான் நாங்கள்

வலுவாக ஆடினாலும்

காலம் போட்ட ஆட்டம்

எங்களை விட மூர்க்கமாய் ஆடியது


வல்லவனுக்கு வல்லவன்

உலகில் உண்டு என்பதை

எங்கள் ஆட்டம்

நன்றாகத்தான் காட்டியது !!

அன்று ,

எங்களைப் பாடிய வாய்களுக்கு

இன்று

 
நாங்கள் அழையா விருந்தாளிகள் ……..

 
 
 
 
பின்குறிப்பு : 

அண்மையில் முன்னைநாள் பெண்போராளி ஒருவரைத் திருமணம் செய்ய யாருமே முன்வராத நிலை ஒன்றைப்பற்றிய செய்தியின் பாதிப்பினால் எழுதப்பட்டது .

 

கோமகன்
25 ஐப்பசி 2013





Thank you for visiting my website