ஈழம் என்ற வார்த்தை..!
ஈழம் என்ற வார்த்தை
சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது
பாடல் பாடிய புலவரின் பெயரும்
ஈழத்து பூதந் தேவனார்
அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு
ஈழம் என்ற நாமம் வந்தது.
ஒரு தேசத்தின் யுத்தம்
முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம்
வடக்கு –கிழக்கு எங்கள் தாயம்
வாழ்வோம் அதில் மட்டுமே
என்ற எண்ண குமுறல்கள்
ஈழத்து தந்தை செல்வா தொடக்கம்
ஒவ்வொரு தமிழனின் காதிலும்
எழுச்சி குரலாக எழுந்தது
அந்த எழுச்சியின் வளர்ச்சிதான்
தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது.
உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம்
எப்போது ஈழம் என்ற சொல்லாலே
ஒவ்வொரு தமிழ் பேசும் உறவுகளுக்கு
முகவரியை கொடுக்கிறது.
சேர சோழ பாண்டியன் ஆண்ட பரம்பரை போல
தமிழனால் ஆண்ட இராச்சியம்
ஈழக்கனவுகள் பல தேசங்களில் திசை திரும்பி
சர்வதேசம் எங்கும் ஈழத்தின் எழுச்சிக்குரல்
ஆர்ப்பரிக்கும் கடலலைபோல் பொங்கி எழுகிறது….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Thank you for visiting my website