லண்டனில் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது என்ன ?

லண்டனில் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது என்ன ?


லண்டனில் உள்ள சில இளைஞர்கள் தமது விசா காலாவதி ஆனால் , அல்லது முடியப் போகிறது என்றால் உடனே யோசிப்பது பாஸ்போட் உள்ள ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாமே என்று. ஆனால் அப்படி நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதனை விளக்கும் ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.
இப்படி அவசரமாக எதனையும் யோசிக்காமல், திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்வீடன் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். முதல் இரவு அன்றே பெண் நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. காலையில் கல்யாணம் முடிந்து ஓயுவு எடுத்த பின்னர் , சில பொருட்களை வாங்கி வருவதாக கூறிச்சென்ற பெண் வீடு திரும்பவில்லை.
புதுக் கணவன், நிலை குழம்பி தடுமாறி இறுதியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளான். மனைவி எங்கே போனார் / ஏன் வீட்டுக்கு திரும்பவில்லை ? இறுதியாக எங்கே இருந்து பேசினார் என்ற விபரங்களை கேட்டறிந்த பொலிசார். கணாவன் சொன்ன குறித்த பஸ் நிலையத்திற்கு சென்று புது மணப் பெண்ணை தேடியுள்ளார்கள்.
மேலும் பொலிசார் உடனடியாகவே அருகில் இருந்த கவுன்சில் CCTV கமராவை , கண்டு அதனை பார்க்க கவுன்சில் சென்றுள்ளார்கள். மேலும் மேலும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. குறித்த பெண் அந்த பஸ் நிலையத்தில் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி , இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கே ஏற்கனவே நின்றுகொண்டு இருந்த ஆணை கட்டி தழுவி , லிப் -லாக் முத்தம் கொடுக்கிறார்.
இருவருமாக அருகில் உள்ள கடை ஒன்றுக்குள் செல்கிறார்கள். அது மது பாணத்தை அதிகம் விற்கும் கடை. அங்கே இருந்து 2 பியர் கேன்களோடு அவர்கள் வெளியே வந்துள்ளார்கள். இது உங்கள் மனைவி தான் என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று பொலிசார் குறித்த வீடியோவைக் காட்ட , அதனைப் பார்த்த கணவனுக்கு அடுத்தடுத்து ஷாக் தான் மிச்சம். இருந்தாலும் ஆம் சார் “திஸ் ஸ் மை வைப்” என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
மனைவிக்கு ஏற்கனவே பாய் பிரன்ட் இருக்கு சரி , அவருக்கு குடிப் பழக்கமும் இருக்கு சரி ௪ ஆனால் அடுத்த விடயம் தான் இன்னும் சூப்பர். அது என்னவென்றால் அவர் தனது கைப் பைக்குள் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து , சுற்றினார்.
அட இது என்ன ரிசில்லா(ஒரு வகை பேப்பர்) சுற்றுகிறார் என்று பார்த்தால். அவரது பாய் பிரன்ட் தனது கையில் இருந்த ஏதோ ஒரு பொருளை கொடுக்க அதனை அந்த பேப்பரில் தூவி அதனை சுற்றி வாயில் வைக்கிறார் புது மணப் பெண். மேலும் அந்த சிகரெட்டை பற்றவைக்கிறார் அவரது கள்ள காதலன். அவர்கள் அடிப்பது கஞ்சா தான் என்பது 100 விகிதம் கன்பேம் ஆகிவிட்டது.
இவை அனைத்தையும் CCTV கமரா துல்லியமாக பதிவு செய்து வைத்துள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும் ? மனைவியைக் காணவில்லை என்று பொலிசாரிடம் கம்பிளைன் கொடுக்கப்போய் , இவ்வளவு உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் புது மணமகன். அப்படியே அவர் வீடு சென்றுவிட்டார். மிகவும் லேட்டாக வீடு திரும்பிய புது மண மகள் விட்டார் பாருங்க ஒரு செய்தி அது தான் உச்சக் கட்டம்.
இன்று கல்யாண வீடு அல்லவா. நான் மிகவும் களைத்துப் போய் விட்டேன். ஷாப்பிங் சென்ற இடத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். அம்பூலன்ஸ் வந்து என்னை நோத் விக் பார்க் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றது. அங்கே இருந்து தான் நேராக வீட்டுக்கு வருகிறேன் என்றார்.
இத்தினைக்கும் இவர் ஒரு தமிழ் பெண் என்பதனை எவரும் மறந்துவிட வேண்டாம். அட ஒரே ஊர் , கிட்டத் தட்ட சொந்தக் காரர் வேறு. அப்பா அம்மா எல்லாம் நல்லவங்கள் என்று சொல்லி தான் இந்த திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.
என்ன செய்வது பெண்ணின் அம்மா அப்பாவின் வளர்ப்பு அப்படி. பெண் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கவில்லை என்றால் ௪ இப்படி தான் நடக்கும் என்பது ஒரு புறம் இருக்க. விசாவுக்காக அவசரப்பட்டு , இல்லையென்றால் வெளிநாட்டில் தொடர்ந்து வாழ ஆசைப்படும் சில தமிழ் இளைஞர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.
Thank you for visiting my website