தமிழர்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, கடமையை மட்டுமே செய்தோம்-ஆந்திர போலீசார்(video)

தமிழர்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, கடமையை மட்டுமே செய்தோம்-ஆந்திர போலீசார்


  திருப்பதி,

தமிழர்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, கடமையை மட்டுமே செய்தோம் என காவல் துறை நலச்சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டும் கும்பல் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் போலீசாரின் பழிவாங்கும் படலம் என்றும், போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைக்கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல் துறை நலச்சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது உண்மை. கடத்தல்காரர்களை நாங்கள் (போலீசார்) சுற்றி வளைத்தபோது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் மூலம் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். நாங்கள் எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் அடங்கவில்லை. எனவே தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தினோம். அதில் சாதி, மதம், மொழி, மாநிலம் என எந்த பாகுபாடும் நாங்கள் பார்க்கவில்லை. எங்கள் கடமையை மட்டுமே செய்தோம்.

எனவே போலீசார் மீது வீண்பழி போடுவதை நிறுத்துங்கள். பலியான செம்மர கடத்தல்காரர்களிடம் இருந்து செல்போன்கள் சிக்கி உள்ளன. அதில் உள்ள எண்களை வைத்து இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும், அதில் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு உள்ளதா? என்றும் விரைவில் உண்மை வெளிவரும். தமிழர்களை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்கள் கடமையை மட்டுமே செய்தோம். அதை வைத்து யாரும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

video ; Andhra Pradesh Encounter : 19 Victims Identified ...-Thanthi TV


                                                                                                                    

                                                                                                                           dailythanthi news


Thank you for visiting my website