இலங்கை ஏ அணியில் துஸ்மன் சமீர மற்றும் தரிந்து கௌஷால்

பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை ஏ அணி சார்பில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மன் சமீர மற்றும் தரிந்து கௌஷால் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் ஏ அணி மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஏ அணி சார்பில் கடந்த மாதம் நிறைவடைந்த உலகக்கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் விளையாடிய துஸ்மன் சமீர மற்றும் தரிந்து கௌஷால் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கிடையில் 2 ஒரு நாள் போட்டி மற்றும் 4 நாள் கிரிக்கெட் போட்டிகள் என 3 போட்டிகள், இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Thank you for visiting my website