ரஷ்ய இளைஞருக்கு உலகின் முதலாவது தலை மாற்று அறுவை சிகிச்சை: நிபுணர்கள் எதிர்ப்பு

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வசிக்கும் வெலேரி ஸ்ப்ரிடோனோவ் என்பவர் சிறு வயதிலேயே மரபணு குறைபாடு காரணமாக வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரின் தலைப்பகுதி மட்டுமே ஆரோக்கியமாக இருப்பதுடன் உடற்பாகங்கள் வலுவிழந்து காணப்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக 20 ஆண்டுகள் வரையே உயிர்வாழ்வர். ஆனால், வெலேரி ஸ்ப்ரிடோனோவிற்கு  தற்போது 30 வயது ஆகிவிட்டது.
ஆகையால், அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. என்றாலும் இவரது தலை தற்போதும் ஆரோக்கியமாக இருக்கிறது.
இதனால் இவருக்கு தலைமாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இத்தாலியின் அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஜியோ கனவேரோ இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளார். ஆனால், உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள் இந்த சிகிச்சைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களிலேயே அந்தக் குரங்கு இறந்துவிட்டது.
2016 இல் இந்த அறுவை சிகிச்சையை நடத்தப்போவதாகவும், இந்த சிகிச்சைக்கு மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.
36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெலேரி ஸ்ப்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Thank you for visiting my website