தடையை நீக்கும்படி நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் கோரிக்கை

தடையை நீக்கும்படி நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் கோரிக்கை


புதிய படத்தில் நடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என ஐதராபாத் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ‘மல்டி ஸ்டார்’ என்ற படத்தில் நாகார்ஜூன்–கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.
படப்பிடிப்புக்கு திததிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் படநிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பிக்சர் ஹவுஸ்’ நிறுவனத்தின் படப்பிடிப்பு முடியும் வரை புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் (17) விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் தரப்பு வழக்கறிஞர் பி.சந்திரசேகரன்ரெட்டி தனது வாதத்தை எடுத்து கூறினார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை 20 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Thank you for visiting my website