இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது இந்தியாவிற்கான 'ஒன் அரைவல் விசா'​

இந்தியா பயணிக்கும் இலங்கையர்கள் இன்று முதல் அந்நாட்டு விமான நிலையங்களில் வீசா பெற்றுக்கொள்ள முடியும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு வீசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்பத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது உறுதி வழங்கியிருந்தார். இந்திய அரசியலமைப்பை நிர்மாணித்த அம்பேத்காரின் ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


Thank you for visiting my website