பிரான்ஸிடமிருந்து நவீன ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது இந்தியா!

பிரான்ஸிடமிருந்து நவீன ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளது இந்தியா!

பிரான்ஸிடமிருந்து 36 நவீன போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக பாரிஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக பிரான்ஸின் ரஃபேல் ரக போர் விமானங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரிவு செய்யப்பட்டன.
இந்தியா 18 விமானங்களை நேரடியாக வாங்கவும் 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று இந்தியாவில் தயாரிக்கவும் உத்தேசிக்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பான பேச்சுக்களில் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், இந்தியா 36 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த விமானங்கள் மிகவும் நவீனமானவை, வான் பாதுகாப்பு, ஊடுருவித் தாக்குதல், கண்காணிப்பு உட்பட பல வேலைகளை இவற்றால் செய்யமுடியும்.
இந்திய விமானப்படையில் ஏற்கனவே பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்பாட்டிலுள்ளன.
தகவல் – பி.பி.சி
Thank you for visiting my website