இங்கிலாந்தில் இனி தந்தையும் மகப்பேற்று விடுமுறை எடுக்க முடியும்!
பிரிட்டனில் இனி குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முடிவு நேற்று (06) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையைப் பிரித்துக்கொண்டு தங்கள் குழந்தையை இருவரும் பராமரிக்கலாம்.
குழந்தையைத் தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக்கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர்.
இந்த முடிவு இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று அந்நாட்டு துணைப் பிரதமர் நிக் க்ளெக் கூறினார்.
Thank you for visiting my website